தையல் இயந்திர பாதுகாப்பு விதிகள்

தையல் மெஷினில் வேலை செய்யும் போது வளரிளம் பருவப் பெண்கள் பின்பற்ற வேண்டிய பதுகாப்பு விதிகள் :

     வளரிளம் பருவப் பெண்ணே , சாதாரன தையல் இயந்திரத்தை கையாளும் போது கவனத்துடன் சில அடிப்படை பாதுகாப்பு விதிகளை கையாள வேண்டும் . அதே வேளையில் பவர் தையல் இயந்திரத்தை கையாளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் , பவர் தையல் இயந்திரத்தை இயக்க மிசரத்தை உபயோகப் படுத்துகின்றோம் . கீழே 30 பாதுகாப்பு விதிகள் கொடுக்கப்பட்டு  உள்ளன. அவற்றை தெளிவாக படித்து , புரிந்து கொண்டு , தெரிந்து கொண்டு தையல் இயந்திரத்தை இயக்குவது நலம் விளைவிக்கும்.

1 . வளரிளம் பருவப் பெண்ணே , தையல் மெஷினில் வேலை செய்யும் போது , கவனக் குறைவாக இருக்க கூடாது.

2 . எப்போதும் வேலை தொடங்குவதற்கு முன் தையல் மெஷினை குறிப்பாக பவர் தையல் மெஷினை சுத்தமாகவும் , சரியாக நூல் கோர்க்கப்பட்டு இருக்க வேண்டும் . புல்லி பெல்ட்டில் நூல் தொங்கக்கூடாது.

3 . எல்லா சாதனங்களும் அதன்தன் இடத்தில இருக்க வேண்டும் . அவ்வாறு இருந்தால் வேலை ஒழுங்காகவும் , சுலபமாகவும் , முடியும்.

4 சிறிய காயமோ , சிறிய விபத்தோ தையல் வேளையில் ஈடுபடும் போது ஏற்பட்டால், உடனே தக்க மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

5 . தரையில் சிந்திய ஆயிலை , உடனே துடைத்து விடுங்கள் . நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள யாரும் வழுக்கி  விழுந்துவிடக் கூடாது.

6 . பவர் தையல் மெஷினைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்ட பிறகே மெஷினை ஓட்ட வேண்டும்.

7 .பவர் மெஷினில் தைக்கும்போது , இறுக்கமான உடைகளையும் பாதுகாப்பான காலணிகளையும் அணிய வேண்டும் .தொய்வான சட்டைகள்  ,நகைகள் ,டைகள் ,ரிப்பன்கள் ,ஸ்வெட்டர்கள் அணிந்து பவர் தையல் மெஷினை இயக்கக் கூடாது . உங்களுக்கு நீளமான கூந்தல் இருக்குமானால் , தையல் மெஷினில் உட்கார்வதற்கு முன் முடியை முடிந்து கொள்ளுங்கள்.

8 . தையல் மெஷினை இயக்கும்போது , நாற்காலியை முன்னும் பின்னுமாக சாய்க்க கூடாது.

9 . தையல் மெஷினின் ஹெட்டை தூக்கும் போதோ , அல்லது இறக்கும் போதோ , இரண்டு கைகளையும் பயன் படுத்த வேண்டும்.

10 . வளரிளம் பருவப் பெண்ணே , எப்போதும் உங்கள் தலை மேஜைக்கு  மேலேயே இருக்கட்டும்.

11 . தையல் மெஷினை இயக்கும் போது , உங்கள் பாதங்கள் டிரேடில் மீது இருக்க கூடாது.

12 .  செட்டிங் செய்யும் போது , ஊசியில் நூல் கோர்க்கும் போதும் டிரேடில் மீது  கால் வைக்க கூடாது.

13 . துணியை தைக்காத போது தையல் மெஷின் மோட்டாரை   நிறுத்தி விட வேண்டும்.

14 . தையல் மெஷினை சுத்தப்படுத்துவதற்கு , ஆயில் போடுவதற்கு , அல்லது அட்ஜஸ்ட் செய்வதற்கு முன்பாக தையல் மெஷின் மோட்டரை நிறுத்திவிட வேண்டும் .

15 . புல்லி பெல்ட்டை கழற்றும் போதும் , மாற்றும் போது , மோட்டாரை   நிறுத்தி விட வேண்டும்.

16 . தையல் தைக்கும் போது ஏதாவது அவசரமோ , சந்தேகமோ ஏற்பட்டால் மோட்டாரை நிறுத்திவிடுங்கள்.

17 . தையல் மெஷினின் பிளக்கை எடுப்பதற்கு   முன் மோட்டாரை நிறுத்துங்கள்.

18 . பவர் தையல் மெஷினில் , ஹேண்ட் வீலை நிறுத்தவும் , மற்றும் ஒட்டவும்  உங்கள் கைகளைப்  பயன் படுதக்க் கூடாது.

19 . பவர் தையல் மெஷினில் , ஹேண்ட்  வீலை செட் செய்வதற்கு மட்டும் கைகளைப் பயன் படுத்த வேண்டும்.

20 . தையல் மெஷினை இயக்குவதற்கு  முன்பு , நகரும் பெட் கவரை மூடுங்கள்.

21 . டிரிம்மிங் அல்லது கட்டிங் செய்யும் போது கழிவுத்  துணிகளை உடனடியாக கூடையில் போடவேண்டும் . தரையில் தூக்கி போடக் கூடாது.

22 . கத்திரிக் கோலை இன்னொருவரிடம் கொடுக்கும் போது , அதன் ஹேண்டில்  பகுதி வாங்கு பவரை  நோக்கி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

23 . தையல் வேலை செய்யும் இடத்தில தையல் வேலையில் ஈடுபட்டு இருக்கும் நேரத்தில் சாப்பிடுவதோ, குடிப்பதோ மற்றும் அரட்டை  அடிப்பதோ கூடாது.


பக்திக்கும் மரியாதைக்கும் உரிய இடம் கோயில் மட்டும் அல்ல .நாம் தையல் தொழில் செய்யும்  இடமும் கூடத்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தையல்கலை ஓர் அறிமுகம்.

தையல் இயந்திர பாகங்கள்

தையல் கலைப் பொருட்கள்